Tuesday, October 11, 2016

இளைஞர்களே !! இளைஞர்களே !!!!

அன்புள்ள அய்யா வணக்கம்
பலநலம் நலமே விளைக.
அடியேன் ஒரு சன்மார்க்கத் தொண்டன் எம் எண்ணமெல்லாம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டுமென்ற எண்ணத்தில் எம்மை மறந்து உறங்கும் மூன்று மணி நேரம் போக மீதமுள்ள நேரமெல்லாம் இதே சிந்தனைத் துடிப்பால் துடிதுடித்துக் கொண்டே உள்ளது.
    இந்த துடிப்பு எம் இளமை காலம் தொட்டே இருந்து வருவதால் சுமார் அறுபது ஆண்டு காலமாக ஏழைகளின்முன்னேற்றத்துக்கு ஏகப்பட்ட உதவிகள் செய்து பார்த்ததில் சில உண்மை அனுபவங்கள் ஏற்ப்பட்டது.
இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அறுபது ஆண்டுகளாக அழித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பில் இருபது கோடிக்கும்மேல் இருக்கும்.
இப்படி அறுபது ஆண்டுகளாக அடியேனின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்;;பணித்து அயராது தொண்டுசெய்தவகையில் ஒரு சில ஏழைகளின்முன்னேருவதும் பலர் முன்னேறாமல் ஏழைகளாகவே உள்ளதும், ஏன் எதனால் என்பது பற்றிய முழூ அனுபவத்தையும் அறிந்துகொண்டேன்.
அப்படி அறிந்துகொண்டதில் ஏழைகளின் பற்றாக்குறையால்யார் எந்த விவசாயமம் செய்தாலும் அவற்றை ஆடுமாடுமளை விட்டு அழிப்பதும் அதிலும் காவல் கார்த்து அழியாமல் பாது கார்த்து விட்டாலும் அதன் மேல் பலன்களை அபகரித்து சென்றுவிடுவதால் யாரலும் எந்த விவசாயமும் செய்ய முடியமால் முற்றிலும் முடங்கிப்போய் விளை நிலங்கள் அனைத்துமே தரிசு நிலங்களாக மாறி எல்லோருடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அயல் நாட்டையே எதிர்ப்பார்த்து ஏகப்பட்ட ந~;டத்துக்குள்ளாகியதுடன் எல்லாப் பொருட்களுமே நஞ்சூட்டப்பட்டு நாளும் அதையே உண்ணுவதால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு பாதிவயதிலேயே பலமிழந்து பல நோய்களுக்கு ஆளாகி அனைவரும் ஆஸ்ப்பட்டல்களுக்கு அலைவது மட்டுமல்லாமல் பணத்தையும் அழித்த உண்மை உள்ளனர்.
இந்த நிலை இனியும் நீடித்தால் இனி வருங்கால நம்பின் சந்ததிகளின் வாழ்வாதாரமே கெட்டு குட்டிச்சுவராப் போய்விடும். இதை உணர்ந்த காலம் முதல் உண்ணாமல் ணறங்காமல் உடல் வருத்தம் பாராமல் அனைத்து உயிர்களின் ஆனற்தமான வாழ்வுக்கு என்ன செய்யலாம் என்று எம்முள் எண்ணிப்பார்த்தேன். அதற்கு கிடைத்த பதில் அனைத்து உயிரினங்களுக்கும் ஆகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் அதுவும் நஞ்சூட்டப்படாத நல்ல சத்தான உணவு கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற பதில் கிடைத்தது.
இந்த எண்ணம் ஏற்படக் காரணம் அடியேனின் ஆழ்மனதில் யேற்படக்கூடிய உண்மையான இரக்கம்தான். இதை எப்படி சொல்கிறேன் என்னுல் உண்மையான உயிர் இறக்கம் உள்ளவர்களுக்கே உண்மை அறிவு உடன் இருந்து உணர்த்தும் என்று வடலூர் வள்ளல் பெருமான் கூறுகிறார்கள். அந்த வள்ளல் பெருமானின் வழித்தோன்றலாக அடியேன் மனம் உள்ளதால் உண்மை அறிவு உடணிருந்து உணர்த்துகின்றது.
அந்த உண்மை என்னவென்றால்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ எல்லா உயிரினங்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், அதற்கு எல்லா தரிசு நிலங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இது சாத்தியப்படுமா என்று எம்முள் சிந்தித்துப் பார்த்தேன். முடியும் என்ற பதில் கிடைத்தது எப்படி முடியும் என்றால் முதலில் எதனுல் அழிவு ஏற்படுகின்றதோ அந்த அழிவுக்குக் காரணம் அவற்றிற்கு தேவையான உணவு பொருட்கள் கிடைக்காமல் தானே? ஆந்த பொருட்கள் கிடைக்கச் செய்து விட்டால் அவற்றுல் அழிவு ஏற்படாது தானே? அழிவு குறைந்து விட்டால் அனைத்து தரிசு நிலங்களும் தாமே பூர்த்தியாகி விடும் தானே? இது தான் அடியேனின் உண்மை அறிவு உணர்த்தும் உத்தமமான யோசனை. இந்த யோசனையை உரு ஊரில் செய்து பார்த்து அதனுல் அடியேன் எண்ணிய எண்ணம் நிறைவேறி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்தால் எல்லா இடங்களிலும் இந்த திட்டத்தை அமுல் படுத்தி அனைத்துயிர்களையும் ஆனற்தமாக வாழச் செய்துவிடலாம் என்பது அடியேனின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
என்ன செய்தால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.
திட்டம் பற்றிய விவரம் அல்லது திட்ட அறிக்கை
ஒரு ஊரில் ஆடு மாடுகளின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுத்து அவற்றிற்கு தேவையான புல் மற்றும் தழைத்தீவனங்கள் கிடைக்கச் செய்து அவைகளின் ஆகாரத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
காரணம் கால் நடை உள்ளவர்களிடம் காடு கரை இல்லை ஏற்கனவே இருந்த இயற்கை காடுகளையும் அழித்துவிட்டோம். இந்த நிலையில் இவைகளது தேவைக்கு மற்றவர்கள் உற்பத்தி செய்தவற்றை அழிக்கதான் செய்வார்கள். குhரணம் ஏழைகளின் வருமானமே இந்த ஆடு மாடுகளை கொண்டுதான் அரைகுறை ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
அந்த அடிப்படையில் தான் அரசம் ஏழைகளுக்கு ஆடு மாடு கொடுக்கின்றது.
அதனால் தான் அடியேன் சொல்வது என்ன வென்றால் அந்தந்த ஊரில் உள்ள ஆடு மாடுகள் எத்தனை என்று கணக்கிட்டு அவற்றிற்கு தேவையான தீவனங்களை ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும் என்கிறேன்.
இது முடியுமா என்றால் முடியும்
எப்படி முடியும் என்றால் ஒவ்வொரு ஊரிலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் முலம் தினசரி வேலை நடக்கின்றது.
அந்த ஆட்களைக் கொண்டு அனைத்து தரிசு நிலங்களிலும் மண்ணுக்கு ஏற்ற மரம் செடி கொடிகள் புல் பூண்டுகளை உற்பத்தி செய்து கொடுத்து அவற்றின் உணவுத் தேவைகளுக்கு உற்பத்தி செய்து கொடுத்துவிடலாம். இப்படி சொன்னவுடன் அவற்றை உற்பத்தி செய்து அவை வளர்ந்து பலன் தருவதற்க்கு முன்னரே அழித்துவிடுவார்களே என்ற அய்யப்பாடு ஏற்ப்படும் அதற்க்கும் அடியேன் என்ன சொல்கிறேன் என்றால் அவ்வூர் ஆடு மாடுகள் வைத்திருப்பவர்களை  அழைத்து இந்த உற்ப்பத்தி அனைத்தும் உங்களுக்காக உங்கள் ஆடு மாடுகளுக்காக தான் உற்பத்தி செய்து கொடுக்கப்படுகிறது ஆகவே அனைவரும் ஆரம்பத்திலேயே அழிக்காமல் சற்று பொருமையாக இருந்தால் இவை வளர்ந்து ஆண்டாண்டுகாலங்களுக்கும் ஆகாரம் அளித்துக்கொண்டே இருக்கும் என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். அதன்பின் உற்ப்பத்தி செய்தவற்றை காப்பாற்றுவதற்கு அவ்வூர்களில்  ஒரு விழிப்புக் குழு ஆரம்பித்து அந்த குழூவின் கண்காணிப்பில் அவை பாதுகாத்து பலனை அனுபவிக்கும் போதும் பகிர்ந்தளிக்க வேண்டும். காரணம் அதையும் கெட்டிக்காரர்கள் அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார்கள் அது மனித இயல்பு ஆனால் அப்படி ஒரு சில பேர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய இந்த விழிப்புக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மற்றவர்கள்கட்டுப்பட்டு நடக்கவேண்டும் கட்டுப்படாதவர்களுக்கு அன்பாக செல்ல வேண்டும் அதிலும் கட்டுப்படாவிட்டால் அதற்க்கான தண்டனையும் கொடுக்க இந்த குழுவுக்கு ஊர் மக்கள் அதிகாரம் வழங்க வேண்டும் அப்படிச் செய்தால் தான் அனைத்துயிர்களையும் ஆனந்தமாக வாழச்செய்ய முடியும்
இப்படி உற்ப்பத்தி செய்யும் போது ஒட்டு மொத்த தரிசு நிலங்கனையும் உற்ப்பத்தி செய்யத் தெடங்காமல் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொருப் பகுதியாக உற்ப்பத்தி செய்து அந்தப் பகுதிக்கு ஆடு மாடுகளை அவிழ்த்து விட்டு மேய்க்காது பார்த்துக்கொள்ள வேண்டும் காரணம் எல்லா தரிசு நிலங்களிலும் ஒரே நேரத்தில் உற்ப்பத்தி செய்ய நினைத்தால் அந்த இடங்களில் மேய்ந்து வந்த ஆடு மாடுகளுக்கு தீவனம் கிடைக்காமல் பேய்விடும் ஆகவே ஒவ்வொரு பகுதியாக உற்பத்தி செய்து முழு தரிசு  நிலங்களையும்  நிரப்பிவிட வேண்டும் முழு தரிசு  நிலங்களையும் பூர்த்தி செய்துவிட்டாலே முழூ பயனையும் பல்பேரும் அனுபவித்து பல்லுயிர்களும் பாதுகாக்கப்படும் இயற்கையும் அழியாது இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கச்செய்ய அடியேனின் ஒத்துழைப்பை தர தயாராக உள்ளேன். எனவே எந்த எதிர்ப்பார்ப்பும் எதிர்பார்க்காத அடியேனின் ஆலோசனைகளை ஆறு மாதத்திற்க்கு கேட்டுதான் பாருங்களேன் அதனால் பலன் இருந்தால் அனைத்து கிராமங்களுக்கும் அத்திட்டத்தை அமுல்படுத்தி அனைத்து ஆடுமாடுகளுக்கும் ஆதாரம் கிடைக்கச் செய்துவிடலாம் அல்லவா?
அடுத்து எதுவுமே கிடைக்காத ஏழைகள்தான் எவர் வீட்டு பொருளாக இருந்தாலும் ஏமாற்றியோ திருடியோ தின்ன எண்ணுகின்றர்கள் இவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால் ஏன் ஏமாற்றவோ திருடவோ போகிறார்கள்
ஆகவே ஒரு ஊரில் உள்ள உண்மையான ஏழைகளை கண்டரிந்து அவர்களது அத்தியவகிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க முன்வறவேண்டும்.
இப்படி சொன்னவுடன் இவை எல்லம் முடிகிறகாரியமா? என்று எல்லோருக்கும் எண்ணத்தான் தோன்றும். ஆனால் முடியும் என்பது அடியேனின் அனுபவ ஆய்வின் முலம் கண்டறிந்த உண்மை அந்த உண்மை என்னவென்றால் ஒரு ஏக்கர் நிலத்தில் காய் கரி கீரை கிழங்கு வகைகளையும் அதே போன்று ஒரு ஏக்கர் வாழை ஒரு ஏக்கர் மா ஒரு ஏக்கர் பால ஒரு ஏக்கா பலபழ மரங்களையும் உற்ப்பத்தி செய்துவிட்டால் அதன் பலன் ஆண்டாண்டு காலத்துக்கும் வந்துக்கொண்டே இருக்கும் அதே போன்று பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பட்டம் நெல்  ஒரு பட்டம் சிறுதாணியம் ஒரு பட்டம் நவதானியம் என சுழற்சி முறையில் உற்ப்பத்தி செய்துவிட்டால் அதன் பலனை அனைத்து ஏழைகளுக்கும் அறைக்காசு வாங்காமல் அனைத்து பொருட்களையும் அன்பளிப்பாகவே கொடுக்கலாம்.
இப்படி கொடுத்துவிட்டால் இவர்கள் ஏமாற்றவோ திருடவோ செய்ய மாட்டார்கள் அவர்கள் தேவை கள் பூர்த்தியாகிவிட்டால் அப்பரம் ஏன் ஏமாற்றப்போகிறார்கள் ஆகவே அய்யேன் சொல்லும் யோவனைகளை ஒரு ஊரில் செயது பாருங்கள்பலன் விரைவில் தெரியும்.
சரி இப்படி எல்லாம் உற்பத்தி செய்ய பணம் தேவைப்படுமே என்று கேட்கக்கூடும் தற்ப்போது உணவுக்கு உத்திரவாதம் என்றதிட்டத்துக்காக மத்திய மாநில அரசுகள் அநேக கோடிகளை அழித்து ஆகாரப் பொருட்களை அளித்து  அனைவரது ஆரோக்கியமும் கெட்டுகுட்டி சுவராகப போய்விட்டது.
அடியேன் சொல்வது அந்த தொகையைக் கொண்டும் இந்த ஊரக வேலைவாய்ப்பு ஆட்களைக் கொண்டும் அரைக்காசு அரசுக்கு  அதிக செலவின்றி அனைத்துப்பொருட்களையுமே நஞ்சற்ற நல்ல பொருட்களாக உற்ப்பத்தி செய்து ஊரில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் தேவையான பொருட்களையும்; கொடுத்துவிடலாமே ஏழைகள்முன்னேற வேண்டும் ஏழைகள் பட்டினிகிடந்துவிடக் கூடாது என்று தானே எல்லோரும் எண்ணுகிறேம்
அப்படி எண்ணி எத்தனை காலமாக எத்தனை ஜந்தாண்டு திட்டங்களை தீட்டிசெயல்பட்டுப் பாhத்தோமே அதனால் எல்லா ஏழைகளையும் முன்னேற்ற முடிந்ததா முழு உணவும் வழங்கப்பட்டதா அதுவும் நஞ்சற்ற நல்ல உணவாக வழங்கப்பட்டதா இல்லையே இப்படி இருக்க இத்திட்டத்தை சிறப்பாக நடத்த சிறியேனிடம் அலோசனை உள்ளது என்றால் ஏற்று செயல்ப்பட்டு ஒரே ஒரு ஊரில் ஒருவருட காலம் செய்துப்பாருங்கள்.
பிறகு அதன் பலனைப்பார்த்து பல ஊர்களுக்கும்  விரிவுப்படுத்தி விவசாய நிலமற்ற ஏழைகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்து விட்டால் அழிவு குறையும். அதன்பின் விவசாயிகள் தங்கள் நிலத்தை தரிசு போடாமல் தக்க பயிர் செய்து தாணி செழிக்க செய்துவிடுவார்கள் அழிவைக்குறைத்தால் தான் அனைத்துயிர்களுக்கும் ஆனந்தமாக வாழ வழிபிறக்கும்.
இந்த உண்மையை உணர்ந்து உடனடியாக உண்மையான ஏழைகளை கண்டரிந்து அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு தேவையான  அளவு கிடைக்க செய்ய வேண்டும் இபப்டி எல்லோரும் எல்லாமும் பெற்று ஏற்றமுடன் வாழ்ந்தால் தான் உண்மையான சுதந்திறம் பெற்றதாக அர்த்தம்.
தனி ஒரு மனிதனுக்கு இங்கு உணவில்லை என்றால் ஜதகத்தினை அழித்திடுவோம் என்று என்றைக்கு பாரதியார் பரைசாற்றினவோ அன்ரைக்கே ஏற்ப்பட்டது ஆபத்து அனைவரது உள்ளத்திலும் பற்றாக்குரை ஏற்ப்பட ஏற்பட பல வழிகளிலும் சிந்திக்கிற மனிதன் அந்த சிந்தனையில் தோன்றியதை செயல்படுத்தி பார்க்கிறன் எதுவுமே ஒத்து வரவில்லை என்றால் என்ன தான் செய்வான். பசி வந்திட பத்தும் பறந்துப் போகும் என்பார்கள் பசி வந்திட காரணம் பட்றக்குறை பட்ஜெட் தான் அதை அறிந்து தான் அடியேன் ஒரே ஒரு ஊரில் செய்துப்பாருங்கள் அதன் பலன் அதிக விரைவில் தெரியும் என்கிறேன். இந்த நலதிட்டத்துக்கு அரசும் பொதுமக்களும் ஆண்மீகவாதிகளுக்கும் அருளாளர்கள் பொருளாளர்கள் மற்று முள்ள அரசியல்வாதிகள் அரசு அலுவலர்கள்அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் இல்லாமை இன்னட்டில் அகல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற்றப்படும்  என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன்மதிப்பு  அயல் நாட்டில் என்று பாடியப்பாடலின் பொருள் புரிந்தவர்கள் செயல்பட முன்வருவார்கள் முடிவு நன்மையாக நடக்கும் என்பதே அடியேனின் அசைக்கு முடியாத நம்பிக்கை நம்பியவர் வாருங்கள் நாட்டையே வாழவைத்து ஏழ்மை இந்தியா என்ற எண்ணத்தையே அகற்றி எல்லாம் உடைத்து இந்தியாவில் என்ற நிலையை உருவாக்கிக்காட்டுவோம். இந்த திட்டம் இனிதே நிரைவேர எல்லாம் வல்ல அதிகாரம் பொருந்திய மாவட்ட ஆட்சி தலைவர் அய்யா ஒத்துழைப்புக் கொடுத்தால் ஓராண்டில் ஒரே ஒரு ஆண்டில் அனைத்து தரிசு நிலங்களையும் பூர்த்தி செய்து அனைத்துத்துரைகளையும் ஆனந்தமாக வாழச் செய்துவிடுவேன். இது உண்மை உறுதி சத்தியம்.
குறிப்பு:  இந்த  உறுதிப்பாடு எங்கிருந்து எற்ப்படுகிறது என்றால் உண்மையான
        உயில் இரக்கத்திலிருந்து  உருவாகிறது  உண்மை உயில் இரக்கம்
        உள்ளவர்களுடைய எண்ணம் எப்படியும் நிரைவேரியேதீரும் இதுவும்
        உண்மை உறுதி சத்தியம்.
அடியேன் அருபது ஆண்டுகளாக அடுத்தவர் நலனில் அக்கரைகொண்டு எம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறேன்.  இது எம் உயிர் வரை ஒயாமல் ஒழியாமல் நடந்து கொண்டே இருக்கும். ஆதன்hபின் உடம்பைவிட்டு உயிர்பிரிந்தவுடன் அந்த உடலையும் பிறர் பயன்பாடு கருதி உடல் தானம் செய்ய முழூ மனதுடன் கூறுகிNறுன். எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்து அடியேனின் உடல் தானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.                                            
நன்றி வணக்கம்

குறிப்பு:-
ஏன் ஏழைகள் முன்னேறவில்லை என்ற விவரம் தெரிந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று முதல் என்ன செய்தால் எல்லா ஏழைகளும் முன்னேறுவார்கள் என்ற விவரத்தை எடுத்துக்கூறியும் அவர்;களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தும் அனைத்த தரிசு நிலங்ககையும் பூர்த்தி செய்து அனைத்து உயிரினங்களையும் ஆனந்தமாக வாழவைக்கவும் அயராது பாடுபட்டும் அதனால் அற்பபலனேகிடைத்துள்ளது. ஆனாலும் அந்த திட்டதை கைவிட்டு விடவும் முடியாமல் தொடர்ந்து பாடுபட்டுவருகிறேன்.
   இந்த ஆண்டு திருமயம் யூனியன் அரசபட்டி ஊராட்சியில்; உள்ள தரிசுநிலங்களில் தான் கண்ட அனுபவப்படி அனைத்து தரிசுநிலங்களையும் பூர்த்தி செய்து அனைத்துயிர்களையும் ஆனந்தமாக வாழவைக்க எண்ணுகிறேன்.
அதற்கு ஆதரவாக திரு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் ஊராட்சி மனிற தலைவர் அவர்களும் பொது மக்களும் ஒத்துழைப்புக்கொடுக்குமாரு  அன்புடன் வேண்டுக்றேன் அடியேன கண்ட அனுபவத்தை எங்காவத ஒரு ஊரில் செய்து காண்பித்து அரசும் பொது மக்களும் உணர்ந்து அதுபோல அனைத்து இடங்களிலும் செயல்பட்டு அனைத்துயிர்களையும் ஆனந்தமாக வாழ வைத்து விடுவோம் என்று அண்டுகள் பலவாக செயல்பட்டும் அடியேனுடைய ண்ணத்தையும் செயலையும் புரிந்து ஏற்று செயல்பட எவரும் முன்வரவில்லை இந்த நிலையிலும் எடுத்தமுடிவில் தளராது தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறேன்.
இந்த மாதிரி தொடர்ந்து  அருபது ஆண்டுகளாக போராடி பல பொது தொண்டுகள் செய்ததில் இதுவரை அழித்த சொத்தின் இன்றைய மதிப்பு இருபது கோடிக்குமேல் இருக்கும் இத்தனை இழப்புகளுக்குப் பின்பும் கண்டுப்பிடித்த உண்மையை  உலகிற்க்கு உணர்த்திவிட துடியாய்துடிக்கிறேன் அடியேனுக்கும்  அலைந்து செயல்பட உடம்பில் சத்தும் இல்லை. அழித்து செயல்பட சொத்தும்  இல்லை. இந்த தள்ளாத வயதிலும் தளராது செயல்பட்டு தாம் கண்ட உண்மையை உலகுக்கு உணர்த்தி உலக உயிர்களை உற்ச்சாகமாக வாழவைக்கத் துடிக்கும்  அடியேனை அடையாலம் கண்டு ஆதரவு தருமாறு அனைவரது அடிபணிந்து அன்பாய் தயவாய்தண்டனிட்டு தாழ்பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்